/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையை ஆக்கிரமித்து நிழற்குடை அதிகாரிகள் மீது வழக்குப்பதிய முடிவு
/
சாலையை ஆக்கிரமித்து நிழற்குடை அதிகாரிகள் மீது வழக்குப்பதிய முடிவு
சாலையை ஆக்கிரமித்து நிழற்குடை அதிகாரிகள் மீது வழக்குப்பதிய முடிவு
சாலையை ஆக்கிரமித்து நிழற்குடை அதிகாரிகள் மீது வழக்குப்பதிய முடிவு
ADDED : அக் 29, 2025 12:53 AM

வேளச்சேரி: பிரதான சாலையை ஒட்டி உள்ள, 30 அடி அகல உட்புற சாலையில் நிழற்குடையை கழற்றி வைத்ததால், வேளச்சேரியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வேளச்சேரி 200 அடி அகல விரைவு சாலையில் இருந்து, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு செல்லும் சாலை, 30 அடி அகலம் கொண்ட இருவழி பாதை. இதை ஒட்டி உள்ள வேளச்சேரி ஏரி கரையில் மேம்பாட்டு பணி நடக்கிறது.
இதற்காக, ஏரியின் கிழக்கு திசையில், விரைவு சாலையில் இருந்த பேருந்து நிழற்குடையை அகற்றி, வடக்கு திசையில் உள்ள, 30 அடி அகல சாலையில் வைத்துள்ளனர்.
சாலையின் பெரும்பாலான பகுதியை இந்த நிழற்குடை ஆக்கிரமித்துள்ளதால், சாலை குறுகலாக மாறிவிட்டது. மேலும், இதை ஒட்டியுள்ள சிக்னலில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறுகலான சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல இடம் கிடைக்காதபோது, சக வாகன ஓட்டிகளுடன் தகராறு ஏற்படுகிறது.
கைகலப்பில் ஈடுபட்டு, ரோந்து போலீசார் சமாதானம் செய்து அனுப்பிய சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால், சாலையில் வைத்துள்ள நிழற்குடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கூறினர்.
போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, ''சாலையில் கழற்றி வைக்கப்பட்ட நிழற்குடையால், 'பீக் ஹவர்' நேரங்களில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.
''வேறு இடத்தில் மாற்றி வைக்க கூறியும், மேம்பாட்டு பணி செய்யும் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டி வரும்,'' என்றனர்.

