/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 58 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் இம்மாதத்திற்குள் துவக்க முடிவு
/
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 58 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் இம்மாதத்திற்குள் துவக்க முடிவு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 58 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் இம்மாதத்திற்குள் துவக்க முடிவு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 58 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் இம்மாதத்திற்குள் துவக்க முடிவு
ADDED : ஆக 21, 2025 01:17 AM
குன்றத்துார், 'செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, புதிய இணைப்புகள் கொடுக்கப்பட்டு, சென்னைக்கும் அருகில் உள்ள நகரங்களான பூந்தமல்லி, ஆவடிக்கும் 53 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தெரிவித்ததார்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து, நாள்தோறும் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து, சென்னை மக்களுக்கு குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 28 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக, மற்றொரு குழாய் அமைக்கப்பட்டு, 53 கோடி லிட்டர் குடிநீர் வழங்கும் பனி நடந்து வருகின்றன.
அதற்கான, சோதனை ஓட்டம் முடிந்த நிலையில், செம்பரம்பாக்கத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, நேற்று ஆய்வு செய்தார். அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின், நேரு அளித்த பேட்டி:
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, சென்னையின் குடிநீர் தேவைக்காக, 28 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது, புதிய இணைப்புகள் கொடுக்கப்பட்டு, சென்னைக்கும் அருகில் உள்ள நகரங்களான பூந்தமல்லி, ஆவடிக்கும் 53 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது. குழாய் பதிப்பு பணி முடிந்து, முழுவதுமாக இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை இம்மாதம், 30ம் தேதிக்குள் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல், ஏரியை சீரமைக்கும் பணி மட்டுமின்றி, ஏரி நிரம்பினால், கல்குவாரிக்கு தண்ணீர் செல்வதற்கான பணியும் நடந்து வருகிறது.
இவ்வாறு நேரு கூறினார். 21-
முன்னதாக, சென்னையில் உள்ள, நீர்நிலைகளை துார்வாரும் பணிக்காக, 7.43 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட மூன்று 'ஆம்பிபியஸ் எஸ்கவேட்டர்' இயந்திரங்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சியால், 81 கி.மீ., நீளம் கொண்ட, 44 நீர்வழி கால்வாய்களை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நீர்நிலைகளில் படிந்துள்ள சேறு, சகதி, மிதக்கும் தாவரங்கள், கழிவு பொருட்கள் மற்றும் மிதக்கும் பொருட்களை அகற்றி சுத்தப்படுத்த, இந்த இயந்திரங்களை மாநகராட்சி பயன்படுத்த உள்ளது.
முதற்கட்டமாக, சைதாபேட்டை தாதண்டர் நகர் அருகே உள்ள மாம்பலம் கால்வாயில் துார்வாரும் பணியை, அமைச்சர் நேரு, நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து அண்ணா நகர் கிழக்கில், 62 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு கழகத்திற்கான புதிய அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
இந்த கட்டடத்தில் முதல் தளத்தில் நான் முதல்வன் அலுவலகம், இரண்டாம் மற்றும் மூன்றாம் தளத்தில் நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு கழக அலுவலகம், நான்காம் தளத்தில் சென்னை நசதிகள் புனரமைப்பு நிறுவன அலுவலகம் செயல்பட துவங்கியுள்ளன.