/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேப்பேரி விடுதியில் தங்கிய டில்லி பெண்ணால் சலசலப்பு
/
வேப்பேரி விடுதியில் தங்கிய டில்லி பெண்ணால் சலசலப்பு
வேப்பேரி விடுதியில் தங்கிய டில்லி பெண்ணால் சலசலப்பு
வேப்பேரி விடுதியில் தங்கிய டில்லி பெண்ணால் சலசலப்பு
ADDED : டிச 31, 2025 03:54 AM
வேப்பேரி: தனியார் விடுதியில் தங்கியுள்ள பெண்களிடம் சுயவிபரங்களை சேகரித்த, டில்லி பெண்ணிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வேப்பேரியில் உள்ள தனியார் விடுதியில், பணிக்கு செல்லும் பெண்கள் தங்கியுள்ளனர். விடுதியில் தங்கியிருந்த வெளிமாநில பெண் ஒருவர், மற்ற அறைகளில் தங்கியுள்ள பெண்களின் சுயவிபரங்களை கேட்டுக் கொண்டிருந்தார்.
அதேபோல், தன் போனில் சிக்னல் இல்லை எனக்கூறி, மற்றவர்களின் மொபைல் போனை வாங்கி தனிப்பட்ட தகவல்களை சோதித்துள்ளார்.
சந்தேகமடைந்த அப்பெண்கள், இதுகுறித்து விடுதியின் ஊழியர்கள் வாயிலாக, வேப்பேரி போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர்.
வேப்பேரி போலீசார், நேற்று முன்தினம், விடுதியில் தங்கியிருந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில், டில்லியைச் சேர்ந்த ஆகாஞ்சா, 32, என்பதும், ஐந்து நிறுவனங்களில் பணியாற்றியதாக அடையாள அட்டை வைத்திருப்பதும் தெரிந்தது. அவரிடமிருந்த ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

