ADDED : ஜூலை 22, 2025 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார் குன்றத்துார், அருணாச்சலேஸ்வரர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன், 55. இவர், மருந்து பொருட்கள் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு, பல்லாவரம் - குன்றத்துார் சாலையில், டி.வி.எஸ்., ஸ்கூட்டரில் சென்றார். குன்றத்துார் அருகே, ஸ்கூட்டர் மீது எதிரே வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்துக்குள்ளான ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்து நாசமானது.
குரோம்பேட்டை போலீசார், உடலை கைப்பற்றி, விசாரிக்கின்றனர்.

