/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராமாபுரத்தில் குடிநீர் 'சப்ளை கட்' நிரந்தர தீர்வு காண கோரிக்கை
/
ராமாபுரத்தில் குடிநீர் 'சப்ளை கட்' நிரந்தர தீர்வு காண கோரிக்கை
ராமாபுரத்தில் குடிநீர் 'சப்ளை கட்' நிரந்தர தீர்வு காண கோரிக்கை
ராமாபுரத்தில் குடிநீர் 'சப்ளை கட்' நிரந்தர தீர்வு காண கோரிக்கை
ADDED : அக் 02, 2024 12:15 AM
ராமாபுரம், ராமாபுரம் ஊராட்சியாக இருந்த போது அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் வாயிலாக, சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்பும், குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, குடிநீர் வாரியம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. அத்துடன், பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய்கள் அமைக்கப்பட்டன.
சமீபத்தில் இந்த இரு திட்டங்களும், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இந்நிலையில், ராமாபுரம் 155வது வார்டு சத்யா நகர், மைக்கேல் கார்டன், திருவள்ளுவர் சாலை உள்ளிட்ட பகுதிகளில், குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது.
குடிநீர் வாரியத்தில் புகார் அளித்தனர். அதன்படி, பல இடங்களில் பள்ளங்கள் தேண்டியும் கழிவுநீர் கலப்பது எங்கு என கண்டுபிடிக்க முடியாததால், இப்பகுதிகளுக்கு கடந்த 6 மாதங்களாக, குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், பகுதி மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு தண்ணீரை சார்ந்து உள்ளனர்.
மேலும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தெருவில் உள்ள குடிநீர் தொட்டிகளில் லாரி தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், இவை குடியிருப்புவாசிகளின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இல்லை.
எனவே, குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டறிந்து, அதை தடுத்து, தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
ராமாபுரம் பகுதியில் புதிதாக குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டன. இன்னும் முழுமையாக திட்டப் பணிகள் முடியவில்லை. தற்போது, 137வது வார்டில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
விரைவில், ராமாபுரம் பாரதி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. அப்போது, பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.