ADDED : நவ 20, 2025 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி: பூந்தமல்லியில், திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில், பல ஆண்டுகளாக வாடகை செலுத்தி ஹோட்டல் மற்றும் காய்கறி கடைகள் வைத்து, வியாபாரிகள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவிலுக்கு புதிதாக தேர் செய்யப்பட்டுள்ளதால், அதை நிறுத்துவதற்காக முன்னறிவிப்பு இன்றி, இரண்டு கடைகளை இடித்து அகற்றும் பணியில், அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.
இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் போலீஸ் பாதுகாப்புடன் இரு கடைகள் இடிக்கப்பட்டன.

