/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபாதையை ஆக்கிரமித்த கடைகள் இடித்து அகற்றம்
/
நடைபாதையை ஆக்கிரமித்த கடைகள் இடித்து அகற்றம்
ADDED : மே 14, 2025 12:36 AM
பூந்தமல்லி, பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் இருந்து குன்றத்துார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. குமணன்சாவடியில் இந்த சாலையின் இருபுறமும் நடைபாதையை ஆக்கிரமித்து சிறு கடைகள், வணிக கடைகளின் முகப்பு பகுதிகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில், நடைபாதையை ஆக்கிரமித்து இருந்த 50க்கும் மேற்பட்ட சிறு கடைகள், கடைகளின் பெயர் பலகை, முகப்பு பகுதிகளை பநெடுஞ்சாலை துறையினர் நேற்று இடித்து, அதிரடியாக அகற்றினர்.
போதிய அவகாசம் வழங்காமல் ஆக்கிரமிப்பை அகற்றுவதாக அதிகாரிகளுடன் கடை உரிமையாளர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பாதுகாப்புக்கு வந்திருந்த பூந்தமல்லி போலீசார், அவர்களை சமாதானம் செய்து, கலைந்து போக செய்தனர்.