
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்:மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை அவதுாறாக பேசியதாக கூறி, அதைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திருவொற்றியூர் தொகுதி சார்பில், நேற்று மதியம், சுங்கசாவடி பேருந்து நிறுத்தம் அருகே, கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, மத்திய அரசிற்கு எதிராகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.