ADDED : செப் 26, 2026 04:01 AM

அ நிறம் | அளவு
கொடுங்கையூர்: கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பை கழிவுகளை இறக்குவதற்கு லாரிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலையை கண்டித்து, செங்கொடி சங்கத்தினர் நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகளவிலான குப்பைகழிவுகள், 'காம்பக்டர்' எனும் இயந்திரம் மூலம் அழுத்தப்பட்டு, குப்பை அளவை சுருக்கி சேகரிக்கப்படுகின்றன.
இவை, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் இறக்குவதற்கு, அதிகபட்சம் நான்கு மணி நேரம் வரை, லாரிகள் காத்திருக்க வேண்டிஉள்ளது.
இதனால் குப்பை சேகரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
இதை கண்டித்து, சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் ஓட்டுநர் பிரிவு சார்பில், கொடுங்கையூர் குப்பை வளாகம் முன் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
