ADDED : செப் 26, 2026 04:02 AM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாநகராட்சிக்கு அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை சட்டப்படி தொழில் வரி செலுத்த வேண்டும். சொத்து உரிமையாளர்களும் வரி செலுத்த வேண்டும். சொத்து உரிமையாளர்கள் வரும், 30ம் தேதிக்குள் நிலுவையின்றி வரி செலுத்த வேண்டும். தவறினால் தனி வட்டி விதிக்கப்படும்.
சொத்துவரி, தொழில் வரி, நிறும வரி ஆகியவை செலுத்த வசதியாக, இன்றும், நளையும் வரி வசூல் மையங்கள் செயல் படும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2561 9305 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
