/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குன்றத்துாரில் அம்பேத்கர் சிலை துணை முதல்வர் திறந்து வைப்பு
/
குன்றத்துாரில் அம்பேத்கர் சிலை துணை முதல்வர் திறந்து வைப்பு
குன்றத்துாரில் அம்பேத்கர் சிலை துணை முதல்வர் திறந்து வைப்பு
குன்றத்துாரில் அம்பேத்கர் சிலை துணை முதல்வர் திறந்து வைப்பு
ADDED : செப் 11, 2025 02:36 AM

குன்றத்துார் :குன்றத்துாரில் அம் பேத்கர் வெண்கல சிலையை, துணை முதல்வர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார்.
குன்றத்துார் பேருந்து நிலையம் அருகே, சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு மாற்றாக, 9 அடி உயரத்தில், 1.5 டன் எடை கொண்ட அம்பேத்கர் வெண்கல சிலை புதிதாக அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. இதில், குன்றத்துார் நகர தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.
சிறப்பு அமைப்பாளராக துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இதில், ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி., பாலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், வி.சி., தலைவர் திருமாவளவன், ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் ஆலந்துார் சட்டசபை தொகுதியில், 8.24 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, 13 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
மேலும், 7.43 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐந்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 7,297 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் உள்ளிட்ட, 362.55 கோடி மதிப்பிலான அரசு ந லத்திட்ட உதவிகளை வழங்கினார்.