/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றுத்திறனாளிகள் அணுகு பாதை பெசன்ட் நகரில் துணை முதல்வர் திறப்பு
/
மாற்றுத்திறனாளிகள் அணுகு பாதை பெசன்ட் நகரில் துணை முதல்வர் திறப்பு
மாற்றுத்திறனாளிகள் அணுகு பாதை பெசன்ட் நகரில் துணை முதல்வர் திறப்பு
மாற்றுத்திறனாளிகள் அணுகு பாதை பெசன்ட் நகரில் துணை முதல்வர் திறப்பு
ADDED : பிப் 12, 2025 12:40 AM

சென்னை,பெசன்ட் நகர் கடற்கரையில், மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை அருகில் இருந்து கண்டு மகிழும் வகையில், 1.61 கோடி ரூபாயில் மரப் பலகையில் அணுகு பாதை அமைக்கப்பட்டது.
இது, சாலையில் இருந்து 190 மீட்டர் நீளம், 9 அடி அகலம் கொண்டது. இந்த அணுகு பாதையை, மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக, நேற்று மாலை, துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
பின் அவர் பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை ஏற்று, மெரினா கடற்கரையில் அமைத்தது போல், பெசன்ட் நகர் கடற்கரையிலும், அணுகு பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதையை பயன்படுத்தி, மாற்றுத்திறனாளிகளும் கடல் அலையை ரசிக்க முடியும்.
திருவான்மியூரில் இதே போன்ற அணுகு பாதை அமைக்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி கடற்கரையில், இதே போன்ற பாதை அமைக்க கேட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
எஸ்.பி.பி., சாலை
நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதன்மை சாலைக்கு, 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை'என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பலகையையும், துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.