/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிளாஸ்டிக் குப்பை தேக்கம் கொடுங்கையூரில் சீர்கேடு
/
பிளாஸ்டிக் குப்பை தேக்கம் கொடுங்கையூரில் சீர்கேடு
ADDED : ஜன 06, 2024 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர், கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகே எழில் நகரில் உள்ள கால்வாய் பாயும் இடத்தில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயை சுற்றி ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.
இந்த கால்வாய் துார் வாரப்படாததால், தரைப்பாலம் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நீரோட்டம் தடைபட்டு கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது; சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் வசிப்போர் கொசு தொல்லையால் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.இந்த பிரச்னைக்கு தீர்வு காண, பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை அகற்றி, கால்வாயை துார் வார வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.