/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
17 ரயில் நிலையங்கள் மேம்பாடு அடுத்த ஆண்டில் நிறைவடையும்
/
17 ரயில் நிலையங்கள் மேம்பாடு அடுத்த ஆண்டில் நிறைவடையும்
17 ரயில் நிலையங்கள் மேம்பாடு அடுத்த ஆண்டில் நிறைவடையும்
17 ரயில் நிலையங்கள் மேம்பாடு அடுத்த ஆண்டில் நிறைவடையும்
ADDED : அக் 26, 2024 02:27 AM
சென்னை:அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 17 ரயில் நிலையங்களில் நடக்கும் மேம்பாட்டு பணிகள், அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வேயில், 'அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்' என்ற புதிய திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக, 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
அதன்படி, தெற்கு ரயில்வேயில், சென்னை ரயில் கோட்டத்தில், சென்னை கடற்கரை, பூங்கா, மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, பெரம்பூர், அம்பத்துார், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை, திரிசூலம், குரோம்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
ரயில் நிலையங்களில், பயணியருக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தும் வகையில், அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. லிப்ட், நடைமேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங், 'சிசிடிவி' கேமிரா உள்ளிட்ட வசதிகள் இடம் பெறும்.
சென்னை ரயில் கோட்டத்தில் முதற்கட்டமாக, 17 ரயில் நிலையங்களில் நடந்து வருகின்றன; இவற்றில், 50 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.
கிண்டி, பரங்கிமலை உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில், 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. அனைத்து பணிகளும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடித்து, பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.