/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.10 கோடியில் மே தின பூங்கா மேம்பாடு
/
ரூ.10 கோடியில் மே தின பூங்கா மேம்பாடு
ADDED : மார் 13, 2024 12:55 AM

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்கா, 3.73 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு சி.எம்.டி.ஏ., சார்பில், 10 கோடி ரூபாய் செலவில், விளையாட்டு உடற்பயிற்சி, பொழுதுபோக்கிற்காக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா, சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் நேற்று நடந்தது. இதில், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்று, பணிக்கான அடிக்கல் நாட்டினார்.
விளையாட்டு மைதானத்தில்குத்துச்சண்டை வளையம் ஆறு வலைபந்தாட்ட மைதானம், நடைபயிற்சி, ஓடுதள பாதைகள், கிரிக்கெட், கால்பந்து மைதானம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதே போல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 6,057 சதுரடி இடத்தில், 2.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட, ஆறு பணியாளர் குடியிருப்பு, பக்தர்கள் தங்கும் விடுதியை, அமைச்சர் உதயநிதி நேற்று திறந்தார்.

