தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மேம்பாட்டு பணி: ரயில் சேவையில் மாற்றம்

 மேம்பாட்டு பணி: ரயில் சேவையில் மாற்றம்

 மேம்பாட்டு பணி: ரயில் சேவையில் மாற்றம்


ADDED : ஜூன் 04, 2026 08:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 08:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: திருச்சி ரயில் கோட்டத்தில், இந்த மாதத்தில் பல்வேறு இடங்களில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், வரும் 6, 10, 13, 17, 20, 24, 27ம் தேதிகளில், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி - புதுச்சேரி காலை 4:10 மணி ரயில், வரும் 6, 10, 13, 17, 20, 24, 27ம் தேதிகளில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும். புதுச்சேரி - எழும்பூர் மாலை 3:35 மணி ரயில், மேற்கண்ட நாட்களில், விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும்

தாம்பரம் - விழுப்புரம் காலை 9:40 மணி ரயில், மேற்கண்ட நாட்களில் முண்டியம்பாக்கம் வரை இயக்கப்படும்

விழுப்புரம் - கடற்கரை மதியம் 1:30 மணி ரயில், முண்டியம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்

திருச்சி - மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மதியம் 1:35 மணி விரைவு ரயில், நாளை, 12, 19ம் தேதிகளில் 45 நிமிடங் கள் தாமதமாக புறப்பட்டு செல்லும்

திருச்சி - எழும்பூர் பகல் 12:10 மணி சோழன் விரைவு ரயில், வரும் 9, 16ம் தேதிகளில், 40 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்

குருவாயூர் - எழும்பூர் இரவு 11:15 மணி விரைவு ரயில், 17ம் தேதி 45 நிமிடங்களும், 10, 24ம் தேதிகளில் 30 நிமிடங்களும் தாமதமாக செல்லும்

கன்னியாகுமரி - ஹவுரா காலை 5:50 மணி விரைவு ரயில், வரும் 6, 13, 20ம் தேதிகளில் 30 நிமிடங்கள் தாமதமாக செல்லும்

துாத்துக்குடி - தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா காலை 7:40 மணி ரயில், வரும் 10, 17ம் தேதிகளில் 55 நிமிடங்கள் தாமதமாக செல்லும்

விரைவு ரயில்கள்

கேரள மாநிலம், பாலக்காடு ரயில் கோட்டத்தில் நடக்கும் மேம்பாட்டு பணி காரணமாக, சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

கர்நாடக மாநிலம், மங்களூரு சென்ட்ரலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு, இரவு 11:45 மணிக்கு இயக்கப்படும் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில், வரும் 7, 14, 18, 21, 28ம் தேதிகளில் ஒரு மணி நேரம் தாமதமாக வந்து சேரும். இதே விரைவு ரயில், வரும் 11, 18, 25, ஜூலை 2ம் தேதிகளில், 35 நிமிடங்கள் தாமதமாக செல்லும்

சென்னை சென்ட்ரலில் இருந்து, மேற்கு வங்க மாநிலம் ஹவுரா செல்லும் இரவு 7:00 மணி விரைவு ரயில், வரும் 7ம் தேதி இரண்டரை மணி நேரம் தாமதமாக சென்றடையும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us