/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.6 கோடியில் சைதையில் வளர்ச்சி பணி
/
ரூ.6 கோடியில் சைதையில் வளர்ச்சி பணி
ADDED : மே 19, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைதாப்பேட்டை:அடையாறு மண்டலம், 169வது வார்டு, சைதாப்பேட்டை, மாம்பலம் கால்வாய் அருகில் உள்ள பூங்கா மற்றும் எல்.டி.ஜி., சாலை, தாமஸ் நகர், ஸ்ரீநகர் காலனி, சி.ஐ.டி., நகர் ஆகிய பகுதிகளில், நடைபாதையை அழகுபடுத்த, 2.32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
வெங்கடாபுரத்தில் உள்ள பயனற்ற கழிப்பறையை இடித்துவிட்டு, அதில் தையல் பயிற்சி கூடம், மகளிர் ஜிம் அமைக்க, 58 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
மேலும், சத்யா நகர் ஸ்ரீநகர் வடக்கு மாட தெரு முதல் அடையாறு ஆறு வரை, மழைநீர் வடிகால் கட்ட, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிகள் விரைவில் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.