/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.3.68 கோடியில் வளர்ச்சி பணிகள் 2வது மண்டலக்குழுவில் தீர்மானம்
/
ரூ.3.68 கோடியில் வளர்ச்சி பணிகள் 2வது மண்டலக்குழுவில் தீர்மானம்
ரூ.3.68 கோடியில் வளர்ச்சி பணிகள் 2வது மண்டலக்குழுவில் தீர்மானம்
ரூ.3.68 கோடியில் வளர்ச்சி பணிகள் 2வது மண்டலக்குழுவில் தீர்மானம்
ADDED : ஆக 29, 2025 10:30 PM
குரோம்பேட்டை,
தாம்பரம் மாநகராட்சி இரண்டாவது மண்டல குழு கூட்டத்தில், 3.68 கோடி ரூபாயில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலக்குழு கூட்டம், தலைவர் ஜோசப் அண்ணாதுரை தலைமையில் நேற்று நடந்தது. இதில், அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சாலை சீரமைத்தல், குப்பை அகற்றுதல், குடிநீர் வினியோகம் என, பல்வேறு கோரிக்கைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர். கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று, மண்டலக்குழு தலைவர் உறுதியளித்தார்.
தொடர்ந்து, 2.07 கோடி ரூபாய் செலவிலான சிமெண்ட் சாலை, மழைநீர் கால்வாய், சிறுபாலம், சிறு மின்விசை நீர் தேக்க தொட்டி, குடிநீர் பணி, மோட்டார் வசதியுடன் கூடிய குடிநீர் பைப் லைன், கூடுதல் கழிப்பறை, நுாலக கட்டடத்திற்கு சுற்றுச்சுவர், ஆழ்துளை கிணறு, வார்டு அலுவலகம் சீரமைப்பு, கழிவு கசடு மற்றும் மண் அகற்றுதல் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 1.61 கோடி ரூபாய் செலவில் கால்வாய்களை துார்வாரும் பணிக்கும் அனுமதி பெறப்பட்டது.
***