/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில் அருகே மதுக்கூடம் பக்தர்கள் புகார் மீது அலட்சியம்
/
கோவில் அருகே மதுக்கூடம் பக்தர்கள் புகார் மீது அலட்சியம்
கோவில் அருகே மதுக்கூடம் பக்தர்கள் புகார் மீது அலட்சியம்
கோவில் அருகே மதுக்கூடம் பக்தர்கள் புகார் மீது அலட்சியம்
ADDED : நவ 24, 2024 12:17 AM
அக்கரை, சென்னை, நீலாங்கரை அடுத்த அக்கரை, கிழக்கு கடற்கரை சாலையில் ஸ்ரீ சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. அங்கு தினசரி மூன்று வேளை பூஜைகளும், சிறப்பு ஆராதனைகளும் நடத்தப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், பல மாவட்டங்களை சேர்ந்தோரும் இக்கோவிலுக்கு வந்து தரிசித்து செல்கின்றனர். தினசரி கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
சாய்பாபா கோவிலுக்கு அருகில், ஸ்ரீ முத்தப்பா மடப்புரம் கோவிலும் அமைந்துள்ளது. அங்கு, பெண் பக்தர்கள் வருகை அதிகம். வியாழக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இந்நிலையில், இக்கோவிலுக்கு ஒட்டியுள்ள உணவகத்தில், கிளப் மற்றும் மதுக்கூடம் செயல்படுகிறது. அங்கிருந்து மது, புகை நாற்றம் கோவிலில் பக்தர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
இது தொடர்பாக கோவில் நிர்வாகத்திடம், பக்தர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
மது அருந்திய பாட்டில், காலி சிகரெட் பெட்டிகள் கோவில் வளாகத்தில் வீசப்படுகின்றன. கோவில் அருகில் மது கடைகள் இருக்கக் கூடாது என்ற தமிழக அரசின் விதிமுறை இருந்தும், இந்த மதுக்கூடம் பகிரங்கமாக செயல்பட்டு வருவது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு வாணிபக் கழகத்திற்கும் பலமுறை புகார்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.