/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வைத்தீஸ்வரன் கோவில் சாலை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
/
வைத்தீஸ்வரன் கோவில் சாலை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
வைத்தீஸ்வரன் கோவில் சாலை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
வைத்தீஸ்வரன் கோவில் சாலை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
ADDED : அக் 21, 2024 03:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சியில், பழமையான வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது.
சென்னை புறநகரை சுற்றியுள்ள நவகிரக தலங்களில், இக்கோவில் செவ்வாய் தலமாக விளங்குகிறது.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலுக்குச் சென்று பரிகாரம் செய்து வழிபடுகின்றனர்.
இந்நிலையில், இந்த இக்கோவிலுக்குச் செல்லும் தார்ச்சாலை கடுமையாக சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், உள்ளூர் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த சாலையை, பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்தினர் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.