/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடபழனி முருகன் கோவில் முகப்பு சாலை நடைபாதை ஆக்கிரமிப்பால் பக்தர்கள் அவதி
/
வடபழனி முருகன் கோவில் முகப்பு சாலை நடைபாதை ஆக்கிரமிப்பால் பக்தர்கள் அவதி
வடபழனி முருகன் கோவில் முகப்பு சாலை நடைபாதை ஆக்கிரமிப்பால் பக்தர்கள் அவதி
வடபழனி முருகன் கோவில் முகப்பு சாலை நடைபாதை ஆக்கிரமிப்பால் பக்தர்கள் அவதி
ADDED : அக் 20, 2025 04:28 AM

வடபழனி முருகன் கோவில் முகப்பு சாலை நடைபாதை ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கி உள்ளதால், விசேஷ நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வடபழனி முருகன் கோவிலில், தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். வார விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
ஆற்காடு சாலையில் இ ருந்து கோவில் முகப்பிற்கு செல்லும் பிரதான சாலையாக, ஆண்டவர் தெரு உள்ளது. இந்த தெருவின் இருபுறமும் நடைபாதை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட் டுள்ளன.
பலர், சாலையையே ஆக்கிரமித்து கடை விரிக்கின்றனர். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும் சாலையை ஆக் கிரமித்து வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
அங்குள்ள சிறு ஹோட்டல்களில், 'காஸ்' சிலிண்டர்கள் ஆபத்தான முறையில் நடைபாதையில் வைத்து சமைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், அணிவகுத்து நிறுத்தப்படும் ஆட்டோ மற்றும் கால்டாக்சிகளாலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் சாலையில் நிற்பதால் பக்தர்கள் கோவில் நுழைவாயிலை அடையவே முடியாத நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், முக்கிய தினங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஆண்டவர் தெருவை கடந்து கோவிலுக்கு செல்வதற்குள் பெரும்பாடுபடுகின்றனர்.
'எடுபிடி'களால் தொல்லை
வடபழனி முருகன் கோவில், ஆண்டவர் தெருவில் நடைபாதையில் கடைகள் நடத்த ஒரு தொகை; இருபுற நடைபாதையும் ஆக்கிரமித்துக் கொள்ள ஒரு தொகை என, ஆளுங்கட்சி எடுபிடிகள், தினசரி ஆயிரக்கணக்கில் மாமூல் பார்த்து விடுகின்றனர். தினசரி மற்றும் மாதம் என்ற முறையிலும் மாமூலில் திளைக்கின்றனர்.
இதற்கு, மாநகராட்சி ஊழியர்கள் உடந்தையாக இருப்பதால், ஆக்கிரமிப்பாளர்கள் யார் வந்தாலும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற மனப்போக்குடன் நடக்கின்றனர்.
போலீசார், அதிகாரிகள்
நடவடிக்கை எடுப்பரா?
வடபழனி முருகன் கோவில் ஆக்கிரமிப்பு அகற்ற காவல் துறை, போக்குவரத்து போலீசார், மாநகராட்சியினர், வார்டு கவுன்சிலர், கோவிலர் நிர்வாகம் என, அனைவரும் ஒருங்கிணைந்து முடிவு செய்ய வேண்டும். ஆற்காடு சாலையில் இருந்து ஆண்டவர் கோவில் முகப்பு வரை பாதசாரிகள், பக்தர்கள் நடைபாதையில் மட்டுமே நடக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். வாரத்திற்கு மூன்று நாட்கள், போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என, பக்தர்கள் கோரியுள்ளனர்.
-- -நமது நிருபர்- -: