/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தர்மாம்பாள் கல்லுாரி அணி இறகு பந்து போட்டியில் வெற்றி
/
தர்மாம்பாள் கல்லுாரி அணி இறகு பந்து போட்டியில் வெற்றி
தர்மாம்பாள் கல்லுாரி அணி இறகு பந்து போட்டியில் வெற்றி
தர்மாம்பாள் கல்லுாரி அணி இறகு பந்து போட்டியில் வெற்றி
ADDED : பிப் 15, 2025 08:43 PM
மணலி, பிப். 16-
சென்னை மண்டல அளவில், பாலிடெக்னிக் கல்லுாரிகள் இடையேயான விளையாட்டு போட்டிகளை, சி.பி.சி.எல்., பாலிடெக்னிக் கல்லுாரி நடத்தி வருகிறது.
இதில், மாணவியருக்கான இறகு பந்து போட்டி, சி.பி.சி.எல்., பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில், நேற்று முன்தினம் நடந்தது.
இதில், சென்னை மண்டலத்தைச் சேர்ந்த, பல்வேறு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவியர் அணி பங்கேற்று விளையாடினர்.
இதன் இறுதிப் போட்டியில், டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியும் - முருகப்பா பாலிடெக்னிக் கல்லுாரியும் மோதின.
இதில், 15 - 13, 13 - 15 மற்றும் 15 - 9 என்ற புள்ளிக்கணக்கில், டாக்டர் தர்மாம்பாள் பாலிடெக்னிக் மகளிர் கல்லுாரி வெற்றி பெற்று, முதலிடம் பிடித்தது.
முருகப்பா பாலிடெக்னிக் கல்லுாரி இரண்டாமிடமும், சி.பி.சி.எல்., பாலிடெக்னிக் கல்லுாரி மூன்றாமிடமும் பிடித்தன.
வெற்றி பெற்ற மாணவியருக்கு, கோப்பை, சான்றிதழை, கல்லுாரி முதல்வர் லட்சுமி நாராயணன் வழங்கினார். முதலிடம் பிடித்த அணி, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

