/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டைடல் பார்க் 'யு' வடிவ மேம்பாலம் பணி முடிக்காததால் சிரமம் அதிகரிப்பு
/
டைடல் பார்க் 'யு' வடிவ மேம்பாலம் பணி முடிக்காததால் சிரமம் அதிகரிப்பு
டைடல் பார்க் 'யு' வடிவ மேம்பாலம் பணி முடிக்காததால் சிரமம் அதிகரிப்பு
டைடல் பார்க் 'யு' வடிவ மேம்பாலம் பணி முடிக்காததால் சிரமம் அதிகரிப்பு
ADDED : ஜன 28, 2025 12:21 AM

அடையாறு, சென்னையின் முக்கியாக சாலையாக, ஓ.எம்.ஆர்., உள்ளது. இதில், திருவான்மியூர், தரமணி, மத்திய கைலாஷ், துரைப்பாக்கம் பகுதிகளை இணைக்கும் சந்திப்பாக, டைடல் பார்க் உள்ளது.
இங்கு, ஐ.டி., நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் அதிகம். மேலும், மேம்பால ரயில் நிலையம் உள்ளதால், ரயில், பேருந்து என மாறிச் செல்லும் பயணியரும் கூட்டமும் அதிகமாக இருக்கும்.
வாகன நெரிசலை குறைக்க,
வாகன நெரிசலை குறைக்க, திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர்., சாலை நோக்கி வாகனங்கள் செல்லும் வகையில், 'யு' வடிவ மேம்பாலம் கட்டும் பணி 2021ல் துவங்கியது. ஒப்பந்த நிறுவனம், சாலை மேம்பாட்டு நிறுவனம் இடையே ஏற்பட்ட நிர்வாக குளறுபடியால், பணியை முடிப்பதில் இழுபறி ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
ள்ளது.
ட, சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்தது.
இந்த பணி, 18 கோடி ரூபாயில், 2021ல் துவங்கியது. இதில், 18 துாண்கள் அமைக்கப்படுகின்றன. மைய துாண், 18 அடி உயரம். மேம்பால சாலை 400 மீட்டர் நீளம், 25 அடி அகலம் உடையது.
இந்த மேம்பாலத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறக்க முடிவு செய்யப்பட்டது. ஒப்பந்த நிறுவனம், சாலை மேம்பாட்டு நிறுவனம் இடையே ஏற்பட்ட நிர்வாக குளறுபடியால், பணியை முடிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
முடக்கம்
டைடல் பார்க் சிக்னலில், ஒரே நேரத்தில் 200 முதல் 300 பாதசாரிகள் சாலையை கடக்கின்றனர். இதனால், சிக்னலை அதிக நேரம் இயக்க வேண்டி உள்ளது.
ஐ.டி. நிறுவனங்கள், ரயில் நிலையம், பேருந்து நிறுத்தத்தை இணைத்து, நடைமேம்பாலம் அமைக்க, 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதில், இரண்டு நகரும் படிகள் வசதியுடன், 350 அடி நீளம், 10 அடி அகலத்தில் நடைமேம்பாலம் கட்டும் பணி, இரு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. இதையும், கடந்த ஜூன் மாதம் திறக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணியிலும் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
ஒப்பந்த நிறுவனத்தின் ஒத்துழைப்பு குறைவு, நிர்வாகத்தில் ஏற்பட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களால், பணியின் வேகம் குறைந்து தாமதம் ஏற்படுகிறது.
இன்னும் பணி முழுமையாக முடியவில்லை. இம்மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும். இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

