/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதிதாக அமைத்த சாலையில் பள்ளம் தோண்டியதால் பாதிப்பு
/
புதிதாக அமைத்த சாலையில் பள்ளம் தோண்டியதால் பாதிப்பு
புதிதாக அமைத்த சாலையில் பள்ளம் தோண்டியதால் பாதிப்பு
புதிதாக அமைத்த சாலையில் பள்ளம் தோண்டியதால் பாதிப்பு
ADDED : பிப் 19, 2024 01:51 AM
மடிப்பாக்கம்:மடிப்பாக்கம் பகுதியில், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள், இரு ஆண்டுகளாக நடந்து வருகின்றன.
இதற்காக, சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, குழாய்கள் பொருத்தும் பணி நடந்ததால், அனைத்து தெரு சாலைகளும் பல்லாங்குழிகளாக மாறின.
இந்நிலையில், பணிகள் முடிக்கப்பட்ட தெருக்களில் பள்ளங்கள் மூடப்பட்டு, புதிதாக தார்ச்சாலை அமைக்கப்படுகிறது.
அதன்படி, மூன்று மாதங்களுக்கு முன், கார்த்திகேயபுரம் இரண்டாவது தெருவில் புதிய சாலை அமைக்கப்பட்டது.
தற்போது, பாதாள சாக்கடை திட்டத்தில், வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதற்காக, புதிதாக அமைக்கப்பட்ட சாலையில், மீண்டும் பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றன.
அரசுத் துறை அதிகாரிகளுக்குள் ஒற்றுமை இல்லாமல், தொலைநோக்கு திட்டமில்லாததாலும், அரைத்த மாவை மீண்டும் மீண்டும் அரைப்பதுபோல, மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவது, இதன் வாயிலாக நிரூபணமாகி உள்ளது.
எனவே, இனிமேலாவது, அதிகாரிகள் சரியாக திட்டமிட்டு பணிகளை துவங்கி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

