/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தரமணி வளாகத்தில் பாழடைந்த கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாகும் அவலம்
/
தரமணி வளாகத்தில் பாழடைந்த கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாகும் அவலம்
தரமணி வளாகத்தில் பாழடைந்த கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாகும் அவலம்
தரமணி வளாகத்தில் பாழடைந்த கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாகும் அவலம்
ADDED : டிச 17, 2025 05:41 AM

சென்னை: சென்னை தரமணி மைய பாலிடெக்னிக் கல்லுாரி, மறைந்த முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
மாணவ - மாணவியர் விடுதி, உணவகம், மருத்துவ சேவைக்கான கட்டடம் ஆகியவை ஒருங்கிணைந்து, இந்த வளாகம் உருவாக்கப்பட்டது.
பாலிடெக்னிக் படிப்பின் மீதான மோகம் காலப்போக்கில் குறைய, அந்த கட்டடங்களின் பொலிவும் குறைந்து, தற்போது பாழடைந்த கட்டடம் போல் காட்சியளிக்கிறது.
பல ஆண்டுகளுக்கு பிறகு, இப்போதுதான், மாணவர் விடுதி இடிக்கப்பட்டு, 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய விடுதி கட்டுமான பணிகள்நடந்து வருகின்றன.
இந்த வளாகத்தில், உள்ள சி.பி.டி., மருந்தக கட்டடம் கடந்த 15 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. இதனால், புதர் செடி கொடிகள் வளர்ந்து காட்சியளிக்கிறது. தற்போது, அந்த மருந்தக கட்டடம், மாடுகள், பன்றிகள் உறைவிடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறிவிட்டது என, விடுதி மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
மைய பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில், பாழடைந்த மருந்தக கட்டடம், மருத்துவ சேவை கட்டடங்களை இடித்து அகற்ற, பல ஆண்டுகளாக பொதுப்பணித் துறைக்கு கடிதம் அனுப்பப்படுகிறது. ஆனால், எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இதனால், அந்த இடமே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. பன்றிகள் அதிக எண்ணிக்கையில் அங்கு இருப்பதால், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி, அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

