/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புறநகரில் பெய்த திடீர் மழையால் ஓ.எம்.ஆரில் போக்குவரத்து நெரிசல்
/
புறநகரில் பெய்த திடீர் மழையால் ஓ.எம்.ஆரில் போக்குவரத்து நெரிசல்
புறநகரில் பெய்த திடீர் மழையால் ஓ.எம்.ஆரில் போக்குவரத்து நெரிசல்
புறநகரில் பெய்த திடீர் மழையால் ஓ.எம்.ஆரில் போக்குவரத்து நெரிசல்
ADDED : டிச 17, 2025 05:40 AM

சோழிங்கநல்லுார்: சென்னையில், நேற்று திடீரென மழை பெய்ததால், ஓ.எம்.ஆர்., உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வேளச்சேரி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், நீலாங்கரை உள்ளிட்ட இடங்களில் நேற்று பெய்த சாரல் மழை, சில மணி நேரத்தில் பலத்த மழையாக மாறியது. இதனால், பணிக்கு புறப்பட்ட வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
குறிப்பாக, ஓ.எம்.ஆரில் மழைநீர் தேங்கியதால் வாகன நெரிசல் ஏற்பட்டது. சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கியதால், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறின. எதிர்பாராதவிதமாக, திடீரென பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.