/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குண்டும் குழியுமான பிராட்வே பஸ் நிலையம்
/
குண்டும் குழியுமான பிராட்வே பஸ் நிலையம்
ADDED : டிச 17, 2025 05:38 AM

பிராட்வே: பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து, தினமும் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பழமையான இப்பேருந்து நிலையத்தை இடித்து, வணிக வளாகங்களுடன் ஒருங்கிணைந்த பேருந்து மையமாக மாற்ற முடிவெடுக்கப்பட்டது. இதற்காக, 823 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகளை, ராயபுரத்தில் இருந்து இயக்க தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், இரு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
இதனால், பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து தான், தற்போது வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அங்குள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இந்த நிலையில் நேற்று பெய்த மழையால் மழைநீர் தேங்கி, பயணியர் நடந்து செல்லவும், பேருந்தில் ஏறவும், இறங்கவும் சிரமப்படுகின்றனர்.

