/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தினமலர் செய்தி எதிரொலி இடையூறு மின்கம்பம் அகற்றம்
/
தினமலர் செய்தி எதிரொலி இடையூறு மின்கம்பம் அகற்றம்
ADDED : அக் 10, 2024 12:57 AM

மேடவாக்கம், மேடவாக்கம், சாய்ராம் நகர், முதல் குறுக்கு தெருவில் ஒரு மின்கம்பம், 2008ல் சாலை நடுவே அமைக்கப்பட்டது.
இரவு நேரத்தில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், அதில் மோதி விபத்தை சந்திப்பது தொடர்கதையாகி வந்தது.
இதனால், மின்கம்பத்தை அகற்றி, சாலை ஓரம் நடவேண்டும் என, மின்வாரியத்திடம் 10 ஆண்டுகளாக, பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பினர்.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதே சாலை ஓரம் புதிய மின்கம்பம் நடப்பட்டது. ஆனால், மின் இணைப்பு மாற்றப்படாமல், பழைய கம்பத்திலேயே இருந்தது.
இது குறித்து, நம் நாளிதழில் கடந்த மாதம் செய்தி வெளியிட்ட நிலையில், மின்வாரிய உயர் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து ஆய்வு செய்தனர். சாலை நடுவே இருந்த மின்கம்பத்தை அகற்றி, ஓரமாக நட உத்தரவிட்டனர்.
இதையடுத்து, சாலை நடுவே இருந்த பழைய கம்பம் நேற்று காலை அகற்றப்பட்டு, புதிய மின் கம்பத்தில் இணைப்பு வழங்கப்பட்டது. மின் வாரியத்திற்கும், 'தினமலர்' நாளிதழுக்கும் பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.