/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவா, புனேவுக்கு நேரடி விமான சேவை
/
கோவா, புனேவுக்கு நேரடி விமான சேவை
ADDED : அக் 08, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையில் இருந்து, கோவா மற்றும் புனே நகரங்களுக்கு, நேரடி விமானங்களை இயக்க, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த சேவை, அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து துவங்கும் என கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து தினமும் மாலை 4:10 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 5:45 மணிக்கு, கோவா சென்றடையும்.
கோவாவில் இருந்து மாலை 6:15 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 7:55 மணிக்கு சென்னை வந்தடையும்.
அதேபோல், சென்னையில் இருந்து இரவு 8:50 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 10:30 மணிக்கு புனே சென்றடையும். அங்கிருந்து இரவு 11:15 மணிக்கு புறப்படும் விமானம், அதிகாலை 12:55 மணிக்கு சென்னை வந்தடையும்.