/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட் உணவகத்தில் இருக்கைகளில் அழுக்கு
/
ஏர்போர்ட் உணவகத்தில் இருக்கைகளில் அழுக்கு
ADDED : நவ 23, 2024 12:23 AM

சென்னை, சென்னை விமான நிலைய முனையத்தில் உள்ள உணவகங்களில் நாற்காலிகள் அழுக்காக இருப்பதாக பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர்.
இங்கு சர்வதேச உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவகங்கள் செயல்படுகின்றன. இவற்றை 'டிராவல் புட் சர்வீஸ்' என்ற நிறுவனம் பராமரித்து வருகிறது.
சில மாதங்களாக விமான நிலையத்தில் உள்ள உணவகங்கள் முறையாக பராமரிப்பின்றி இருப்பதாக பயணியர் புகார் தெரிவித்து வந்தனர். சம்பந்தப்பட்ட பராமரிப்பு நிறுவனம் மீது சமூகவலைதளத்தில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
விமான நிலைய வளாகத்தில் உள்ள உணவகங்களில் உள்ள இருக்கைகள் மிகவும் அழுக்கடைந்து, அருவெறுப்பான நிலையில் இருப்பதாக, பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் புகார் அளித்துள்ளார். அந்த பதிவில், 'தண்ணீர் பாட்டில் முதல் இட்லி, காபிக்கு அதிகமாக விலை வைத்து விற்பனை செய்யும் உணவகங்களில், பயணியர் அமரும் இருக்கைகளை கூட சுத்தமாக வைத்திருக்க முடியாதா?' என, குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள், 'சம்மந்தப்பட்ட பராமரிப்பு நிறுவனத்திற்கு தெரியப்படுத்தி உள்ளோம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்து உள்ளனர்.