sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அசுத்தமான அரசு மருத்துவமனை கேன்டீனால்...குமட்டல் :சுகாதாரமற்ற உணவால் பல தரப்பினரும் அதிருப்தி

/

அசுத்தமான அரசு மருத்துவமனை கேன்டீனால்...குமட்டல் :சுகாதாரமற்ற உணவால் பல தரப்பினரும் அதிருப்தி

அசுத்தமான அரசு மருத்துவமனை கேன்டீனால்...குமட்டல் :சுகாதாரமற்ற உணவால் பல தரப்பினரும் அதிருப்தி

அசுத்தமான அரசு மருத்துவமனை கேன்டீனால்...குமட்டல் :சுகாதாரமற்ற உணவால் பல தரப்பினரும் அதிருப்தி

2


ADDED : ஏப் 27, 2025 02:22 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 02:22 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை அரசு மருத்துவமனை வளாகங்களில் உள்ள உணவகங்கள், சுகாதாரமற்ற அசுத்தமான நிலையில் இருப்பதால், அனைத்து தரப்பினரும் முகம் சுளிக்கின்றனர். அங்கு சாப்பிடுவதால், தாங்களின் உடல்நிலையும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளதாக, நோயாளிகளின் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஆசியாவிலேயே மிகப்பெரியது. இங்கு, 42க்கும் மேற்பட்ட உயர்தர சிகிச்சை பிரிவுகள் செயல்படுகின்றன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, தினமும் 15,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். மேலும், 50க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இங்கு, உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படும் 3,000 பேருக்கு, மருத்துவமனை சார்பிலேயே இலவச உணவு வழங்கப்படுகிறது.

அதே நேரம், புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுடன் உதவிக்கு இருக்கும் உறவினர்கள், மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியாரால் ஒப்பந்த அடிப்படையில் நடத்தப்படும் உணவகத்தில் தான், டீ, ஜூஸ், உணவு வாங்கி சாப்பிடுகின்றனர்.

கேன்டீனில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சாப்பிட வரும் நிலையில், விற்பனை செய்யப்படும் உணவின் தரம் கேள்விக்குறியாக உள்ளது.

குறிப்பாக, டீ, ஜூஸ் ஆகியவை பெரும்பாலும் தண்ணீர் போல் தான் இருக்கின்றன. சமைத்த உணவுப்பொருட்களில் சுவையே இல்லை; உணவு தயாரிக்கும் இடம், அவை வைக்கப்பட்டுள்ள இடம் ஆகியவையும் பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கும் வகையில், மிக அசுத்தமானதாக உள்ளன.

இட்லியில் அதிகம் புளிப்பேறி இருப்பதாகவும், பழைய எண்ணெயில் பூரி உள்ளிட்ட பலகாரங்கள் பொரிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. ஊறுகாயை சுகாதாரமற்ற ஒரு சிறிய பக்கெட்டில் வைத்துள்ளனர். இவற்றை சாப்பிடுவோர், உணவு செரிமான பிரச்னை, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுபோல், பல உணவு வகைகளின் தரமும் கேள்விக்குறியாக உள்ளது.

ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, எழும்பூர் அரசு மகப்பேறு, குழந்தைகள் நலம், கண் மருத்துவமனைகள், கஸ்துாரிபா காந்தி, ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி உள்ளிட்ட பெரும்பாலான மருத்துவமனைகளில் உள்ள உணவகங்களிலும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது.

இதுகுறித்து, மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோர் கூறியதாவது:

உடல்நிலை பாதிப்பு காரணமாக, அவ்வப்போது மருத்துவமனைக்கு வர வேண்டியுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் கூட்டம் இருப்பதால், காலையில் வந்தால் மருத்துவ சிகிச்சை முடித்து, மதியம் தான் வீட்டிற்கு செல்ல முடியும்.

எனவே, டீ, காபி, பிஸ்கட், உணவு என எதுவாயினும், மருத்துவமனை வளாகத்தில் தான் சாப்பிட வேண்டும். அங்கு, கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தவிர, சுகாதாரமின்றி வழங்கப்படுகின்றன. கேன்டீன் வளாகமும், முகம் சுளிக்கும் வகையில் மோசமாக இருக்கிறது.

ஆனால், பொதுமக்கள், நோயாளிகள் அமர்ந்து சாப்பிடும் இடம் முதல், அவர்களுக்கு உணவு கொண்டு வர பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் உட்பட, அனைத்தும் அசுத்தமாகவே உள்ளது.

இதுகுறித்து அங்கு பணியாற்றுவோரிடம் கூறினால், 'சாப்பிட்டு விட்டு கிளம்புங்கள்' என, மிரட்டுகின்றனர்.

மருத்துவமனை தரப்பு மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

மருத்துவமனை வளாக கேன்டீன் சுகாதாரத்தை பாதுகாத்து, பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, ராஜிவ்காந்தி மருத்துவமனை தரப்பில் கூறுகையில், 'மருத்துவமனை நிர்வாகம் சார்பில், அவ்வப்போது ஆய்வு செய்து, சுகாதாரமாக பராமரிக்க அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. புகாரின் அடிப்படையில் அடிக்கடி ஆய்வு செய்யப்படும்' என்றனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us