/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீக்குளித்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
/
தீக்குளித்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
ADDED : ஜன 31, 2026 05:17 AM
சென்னை: விருதுநகரைச் சேர்ந்தவர் ஆல்பர்ட், 30; மாற்றுத்திறனாளி. இவர், வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 11:00 மணியளவில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநில மனித உரிமைகள் கமிஷன் அலுவலகத்தில், புகார் மனு அளிக்க வந்தார்.
அப்போது, திடீரென தன் உடலில் பெட்ரோல் ஊற்றி, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த பாதுகாப்பு போலீசார், தீயை அணைத்தனர். பின், ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். அவர், தற்கொலைக்கான காரணம் குறித்து, அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

