/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையில் தகராறு: அ.தி.மு.க., நபர் கைது
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையில் தகராறு: அ.தி.மு.க., நபர் கைது
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையில் தகராறு: அ.தி.மு.க., நபர் கைது
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையில் தகராறு: அ.தி.மு.க., நபர் கைது
ADDED : ஜூலை 11, 2025 12:27 AM
துரைப்பாக்கம், தி.மு.க.,வினர் நடத்திய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில், பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசிய குற்றச்சாட்டில், அ.தி.மு.க., உறுப்பினரை போலீசார் கைது செய்தனர்.
தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற தலைப்பில், வீடு வீடாக சென்று, உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. பெருங்குடி பகுதியில், அங்குள்ள வட்ட செயலர் ஆறுமுகம் தலைமையில், நேற்று முன்தினம் வீடுதோறும் சென்று உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டது.
கந்தன்சாவடி, திரு.வி.க., நகரில் சென்றபோது, அங்குள்ள அ.தி.மு.க.,வை சேர்ந்த வேலு, 45, என்பவர், 'அ.தி.மு.க.,வினர் வசிக்கும் தெருவில், எப்படி நீங்கள் வருவீர்கள்' என கேட்டுள்ளார்.
இதில், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, தி.மு.க., மகளிர் அணி துணை தலைவர் ஈஸ்வரி, 35, என்பவரை, வேலு ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து, ஈஸ்வரி துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிந்த போலீசார், வேலுவை கைது செய்தனர்.