/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாகனங்களால் துாய்மை பணிக்கு இடையூறு
/
வாகனங்களால் துாய்மை பணிக்கு இடையூறு
ADDED : மார் 06, 2024 12:40 AM
புழுதிவாக்கம், புழுதிவாக்கம், பாலாஜி நகர் விரிவு, 24வது தெருவில், 300 அடி துாரத்திற்கு 20க்கும் மேற்பட்ட வாகனங்கள், சாலை ஓரம் நிறுத்தப்பட்டுள்ளன.
பகுதிமக்கள் கூறியதாவது:
நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் 10க்கும் மேற்பட்டவை ஒரு மாதத்திற்கும் மேலாக இதே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் துாய்மை பணியாளர்கள், இந்தச் சாலையை முழுமையாக சுத்தம் செய்ய முடியவில்லை.
மேலும், சாலையின் அகலம் குறைந்து, தண்ணீர் லாரி, குப்பை லாரி உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்லவும் இடையூறு ஏற்படுகிறது.
வாகனங்களின் கீழ்ப்பகுதியை, தெருநாய்கள் தங்கள் கூடாரமாக பயன்படுத்துவதாலும், பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. வாகனங்களை அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

