/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவல் நிலையத்தில் கேமரா பழுது புகார் அளிக்க வருவோர் அதிருப்தி
/
காவல் நிலையத்தில் கேமரா பழுது புகார் அளிக்க வருவோர் அதிருப்தி
காவல் நிலையத்தில் கேமரா பழுது புகார் அளிக்க வருவோர் அதிருப்தி
காவல் நிலையத்தில் கேமரா பழுது புகார் அளிக்க வருவோர் அதிருப்தி
ADDED : பிப் 16, 2024 12:31 AM

அண்ணா நகர், அண்ணா நகர் காவல் நிலைய நுழைவாயிலில், கண்காணிப்பு கேமராக்கள் உடைந்து தொங்குவது, புகார் அளிக்க வருவோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணா நகர் மூன்றாவது அவென்யூவில், 'கே - 4' அண்ணா நகர் காவல் நிலையம் இயங்கி வருகிறது.
இந்த வளாகத்தில், அண்ணா நகர் காவல் மாவட்டத்தின் துணை மற்றும் உதவி கமிஷனர்கள் அலுவலங்கள், போக்குவரத்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு உள்ளிட்டவை செயல்படுகின்றன.
அதேபோல், அனைத்து மகளிர் போலீஸ், சைபர் கிரைம் பிரிவு மற்றும் அண்ணா நகர் காவல் குடியிருப்புகள் உள்ளன. இங்கு, தினமும் பல்வேறு வழக்கு தொடர்பாக, நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நிலையத்தில், போதிய பராமரிப்பு கூட கிடையாது. குறிப்பாக, காவல் நிலையத்தின் நுழைவாயிலின் இருபுறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உடைந்து தொங்குகின்றன. இவை பயன்பாட்டில் உள்ளனவா என்பது கூட கேள்விக்குறியாக உள்ளது.
இதுகுறித்து, புகார் அளிக்க வந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு தினமும் புகார்தாரர்கள் மட்டுமின்றி, குற்றவாளிகளும் அழைத்து வரப்படுகின்றனர்.
அலுவலகத்தின் உட்புறத்தில் கேமராக்கள் உள்ளன. ஆனால், வளாகத்தில் போதிய கேமராக்கள் கிடையாது. இதனால், வளாகத்தின் நுழைவாயிலில் குற்ற சம்பவங்கள் நடந்தால், குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்படும்.
குறிப்பாக, நுழைவாயிலிலேயே இதுபோன்று உடைந்து தொங்கும் கேமராக்கள் இருப்பதால், புகார் அளிக்க வருவோர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
அண்ணா நகர் முழுதும், போக்குவரத்து விதிமீறுவோரை கண்காணிக்க நுாற்றுக்கணக்கான கேமராக்கள் உள்ள நிலையில், காவல் நிலையத்தில் இதுபோல் இருப்பது அலட்சிய போக்கைக் காட்டுகிறது.
உடைந்த கேமராவை ஆய்வு செய்து, சீரமைக்க வேண்டும். இணைப்பு இல்லாத கேமராவாக இருந்தால் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், வளாகத்தில் தடுப்பு சுவர்களில் சேதமடைந்த விளக்குகளை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.