/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பழனிசாமி காரை வழிமறித்த அதிருப்தி அ.தி.மு.க.,வினர்
/
பழனிசாமி காரை வழிமறித்த அதிருப்தி அ.தி.மு.க.,வினர்
பழனிசாமி காரை வழிமறித்த அதிருப்தி அ.தி.மு.க.,வினர்
பழனிசாமி காரை வழிமறித்த அதிருப்தி அ.தி.மு.க.,வினர்
ADDED : நவ 03, 2025 01:33 AM
சென்னை: ஆலந்துார் தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகளை மாற்றக் கோரி, சென்னை விமான நிலையத்தில், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி காரை நிறுத்தி, அதிருப்தி நிர்வாகிகள் புகார் மனு வழங்கினர்.
ஆலந்துார் தொகுதி அ.தி.மு.க.,வில், இரண்டு பகுதிகள் நான்காக பிரிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால், சில நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பகுதி செயலர்கள், வட்ட செயலர்கள் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், சேலம் செல்வதற்காக, பழனிசாமி காரில் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, ஆலந்துார் தொகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், விமான நிலைய நுழைவாயிலுக்கு முன் குவிந்தனர்.
ஜி.எஸ்.டி., சாலையில் வந்த பழனிசாமி காரை வழிமறித்தனர். காரை நிறுத்திய பழனிசாமி, அவர்களிடம் பிரச்னை குறித்து கேட்டறிந்தார். அவர்கள் அளித்த மனுவையும் பெற்று கொண்டார்.
அம்மனுவில், 'ஆலந்துார் பகுதி நிர்வாகிகள் சிலர், கட்சி விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
'அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக, பழனிசாமி கூறினார்.

