/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் மாற்றியின் கீழ் குப்பை திருமுல்லைவாயலில் அவலம்
/
மின் மாற்றியின் கீழ் குப்பை திருமுல்லைவாயலில் அவலம்
மின் மாற்றியின் கீழ் குப்பை திருமுல்லைவாயலில் அவலம்
மின் மாற்றியின் கீழ் குப்பை திருமுல்லைவாயலில் அவலம்
ADDED : அக் 24, 2024 12:21 AM

ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் 10வது வார்டில் மரகதம் சந்திரசேகர் தெருவில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு, சி.டி.எச்., சாலையோரம் மின்மாற்றி உள்ளது. மின்மாற்றியின் கீழ் பகுதி வாசிகள் உணவு உள்ளிட்ட குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால், அப்பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது. வார்டு கவுன்சிலர் ஆய்வு செய்து, குப்பை கொட்டாமல் இருக்க விழிப்புணர்வு பேனர் வைத்தார். ஆனால், நிலைமை பழையபடியே தொடர்கிறது. ஆடு, மாடு, நாய்களும் உணவிற்காக அப்பகுதியில் மேய்ந்து வருகின்றன.
இதனால், எந்நேரமும் விபத்து அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கார்த்திகேயன், திருமுல்லைவாயில்