/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாவட்ட கூடைப்பந்து 13 பள்ளிகள் மோதல்
/
மாவட்ட கூடைப்பந்து 13 பள்ளிகள் மோதல்
ADDED : நவ 13, 2024 09:14 PM

சென்னை:தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.
அந்த வகையில, வடசென்னை வருவாய் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி, முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நேற்று துவங்கியது.
முதல் நாளாக, நேற்று நடந்த மாணவியருக்கான ஆட்டத்தில், வடசென்னை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட 13 பள்ளி அணிகள் பங்கேற்றன. 14, 17 மற்றும் 19 வயது ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
காலையில் நடந்த 17 வயதுக்கு உட்பட பிரிவு போட்டி ஒன்றில், முருக தனுஷ்கோடி பள்ளி, 23 - 13 என்ற கணக்கில் டான்பாஸ்கோ பள்ளியை தோற்கடித்தது.
அதேபோல், 14 வயதினருக்கான ஆட்டத்தில், வேலம்மாள் அணி, 36 - 8 என்ற கணக்கில் எஸ்.பி.ஓ.பி., பள்ளியை தோற்கடித்தது.
போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன. மழையால் ஒத்திவைக்கப்பட்ட மாணவருக்கான பால் பேட்மின்டன் போட்டிகள், இன்று நடக்க உள்ளன.