sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 வாக்காளர் பட்டியல் திருத்த பணியால் ஓட்டுப்பதிவு 80 சதவீதமாக அதிகரிக்கும் மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் நம்பிக்கை

/

 வாக்காளர் பட்டியல் திருத்த பணியால் ஓட்டுப்பதிவு 80 சதவீதமாக அதிகரிக்கும் மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் நம்பிக்கை

 வாக்காளர் பட்டியல் திருத்த பணியால் ஓட்டுப்பதிவு 80 சதவீதமாக அதிகரிக்கும் மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் நம்பிக்கை

 வாக்காளர் பட்டியல் திருத்த பணியால் ஓட்டுப்பதிவு 80 சதவீதமாக அதிகரிக்கும் மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் நம்பிக்கை


ADDED : மார் 17, 2026 05:32 AM

Google News

ADDED : மார் 17, 2026 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியால் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு, 80 சதவீதமாக அதிகரிக்க கூடும்,'' என, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் பேசினார்.

சென்னை ரிப்பன் மாளிகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான குமரகுருபரன் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்குபின், குமரகுருபரன் பேசிய தாவது:

சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளில், 28 லட்சத்து, 30,936 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், 4,079 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

போலீஸ், தேர்தல் அலுவலர்கள் கொண்ட, 375 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டதோடு, 16,500 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தேர்தலுக்காக, 13,634 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 6,349 கட்டுப்பாட்டு கருவிகள் தயார் நிலையில் உள்ளன.

ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் மூன்று பறக்கும் படைகள் என்ற வீதம், 48 பறக்கும் படைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அத்துடன், 48 நிலையான கண்காணிப்பு படைகள் உள்ளன. மேலும், 16 வீடியோ கண்காணிப்பு படைகளும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

மாவட்ட தேர்தல் அலுவலக ரிப்பன் மாளிகையில், 1800 425 7012 என்ற எண்ணில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு தொகுதியில், ஒரு வேட்பாளர், 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம். அதற்கான கட்டண விபரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தேர்தல் செலவு கணக்கிடப்படும்.

தேர்தல் தொடர்பான பேரணி, கூட்டம் நடத்த உள்ள இடங்கள் போலீசார் வாயிலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில், 178 இடங்களில் உள்ள, 785 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை. இங்கு பேனர், போஸ்டர்கள் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. மதுபானம் எவ்வளவு எடுத்து செல்லலாம் என, அரசியல் கட்சியினர் கேட்டனர். அதுகுறித்து ஆலோசித்து அறிக்கை தரப்படும்.

சென்னையில் எப்போதும் ஓட்டுப்பதிவு, 60 சதவீதமாகவே உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியால், இம்முறை 75 முதல் 80 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தி.மு.க.,வுக்கு சாதகமாக அதிகாரிகள் நியமனம் தனிமனிதர்கள் ரொக்கமாக எடுத்துச் செல்லும் தொகையை, 50,000 ரூபாயில் இருந்து அதிகரிக்க கூறியுள்ளோம். மதுக்கடைகள் 24 மணி நேரம் செயல்படுவது குறித்தும், தனி மனிதர் எந்த அளவுக்கு மதுவை எடுத்துச் செல்லலாம் என்றும் விளக்கம் கேட்டோம். தேர்தல் நேரத்தில், ஆளும் தி.மு.க.,வுக்கு சாதகமாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். காவல் துறை மற்றும் தேர்தல் அலுவலர்களில் இரண்டாம் நிலையில் இருப்போர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் நிலை உள்ளது. பறக்கும் படையில் வீடியோ படம் பிடிப்போரை நியமிக்கும் நிறுவனம், ஆளும் கட்சிக்கு வேண்டியதாக உள்ளது. - கராத்தே தியாகராஜன், பா.ஜ., மாநில செயலர்.






      Dinamalar
      Follow us