/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிவிஷன் கிரிக்கெட் எத்திராஜ் அணி வெற்றி
/
டிவிஷன் கிரிக்கெட் எத்திராஜ் அணி வெற்றி
ADDED : அக் 25, 2025 04:49 AM

த மிழ் நாடு கிரிக்கெட் சங்கத்தின், ஆண்களுக்கான ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் தொடரில், சாந்தோமில் உள்ள செயின்ட் பேட்ஸ் மைதானத்தில், எத்திராஜ் எஸ்.ஏ., மற்றும் மெட்ராஸ் இமானுவேல் சி.சி., அணிகள் மோதின.
மெட்ராஸ் இமானுவேல் சி.சி., அணி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன் எடுத்தது. அணி வீரர்கள் பிரதீஷ் 55, பியூலர் ஜூலின் 66 ஆகியோர் அதிக ரன் குவித்தனர். எத்திராஜ் எஸ்.ஏ., அணி சார்பில் நரசிம்மன் 5 விக்கெட் வீழ்த்தினார்.
எத்திராஜ் எஸ்.ஏ., அணி 42.3 ஓவரில் மூன்று விக்கெட் மட்டுமே இழந்து 233 ரன் குவித்தது. கரண் 102 ரன், பாபு 67 ரன் அடித்து அசத்தினர். எத்திராஜ் எஸ்.ஏ., அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

