/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிக லாபம் ஆசைகாட்டி ரூ.1.43 கோடி மோசடி வங்கி 'மாஜி' அதிகாரி கைது
/
அதிக லாபம் ஆசைகாட்டி ரூ.1.43 கோடி மோசடி வங்கி 'மாஜி' அதிகாரி கைது
அதிக லாபம் ஆசைகாட்டி ரூ.1.43 கோடி மோசடி வங்கி 'மாஜி' அதிகாரி கைது
அதிக லாபம் ஆசைகாட்டி ரூ.1.43 கோடி மோசடி வங்கி 'மாஜி' அதிகாரி கைது
ADDED : அக் 25, 2025 04:48 AM

சென்னை: அதிக லாபம் ஆசைகாட்டி 1.43 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட, தனியார் வங்கியின் முன்னாள் மேலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, பெருங்குடியைச் சேர்ந்தவர் கார்த்திக், 36. இவர், கடந்த மார்ச் மாதம் சமூக வலைதளத்தில் வந்த 'டிரேடிங்' விளம்பரத்தை பார்த்து, அதில் கொடுக்கப்பட்டிருந்த 'வாட்ஸாப்' குழுவில் இணைத்துள்ளார்.
அவற்றில் முதலீடு செய்யும் பணத்திற்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என, அடிக்கடி வந்த விளம்பரங்கள் மற்றும் குழுவில் இருந்தவர்களின் வார்த்தைகளை நம்பி, பல்வேறு தவணையாக, 1.43 கோடி ரூபாய் செலுத்தி உள்ளார்.
துவக்கத்தில் சிறிது லாபம் கிடைத்துள்ளது. அதன்பின், அவரால் முதலீடு செய்த தொகையை எடுக்க முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில், சூர்யா ஏற்றுமதி இறக்குமதி நிறுவன உரிமையாளரான நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சூர்யா ஸ்ரீனிவாஸ், 50, என்பவர், மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவரது கூட்டாளியான, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள கோடக் மகேந்திர தனியார் வங்கி கிளையின் முன்னாள் மேலாளரான மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த சேஷாத்ரி எத்திராஜ், 43, என்பவர், மோசடிக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
இருவரையும் நேற்று, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

