/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டேபிள் டென்னிஸ் 500 பேர் பங்கேற்பு
/
டேபிள் டென்னிஸ் 500 பேர் பங்கேற்பு
ADDED : அக் 25, 2025 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த மிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான தரவரிசை டேபிள் டென்னிஸ் தொடர், சென்னையின் பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கியது.
தமிழகத்தில் இருந்து 500க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன், அபிநந்தன், ஹன்சினி, ஸ்ரேயா ஆனந்த் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இதில் 11 வயதுக்குட்பட்டோர் முதல் 19 வயது வரை ஐந்து பிரிவு இருபாலருக்குமான ஓப்பன் பிரிவு, கார்ப்பரேட் மற்றும் வெட்டிரன் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.

