/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிவிஷன் கிரிக்கெட் லீக் அத்தீஷ் சி.சி., அபாரம்
/
டிவிஷன் கிரிக்கெட் லீக் அத்தீஷ் சி.சி., அபாரம்
ADDED : மே 15, 2024 09:47 PM
சென்னை:போரூரில் நடந்த முதலாவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், அத்தீஷ் சி.சி., அணி, 116 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்ரீஹெர் ஆர்.சி., அணியை தோற்கடித்தது.
திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், முதலாவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள், போரூரில் உள்ள தனியார் மருத்துவ பல்கலையில் நேற்று நடந்தன.
முதல் போட்டியில், அத்தீஷ் சி.சி., மற்றும் ஸ்ரீஹெர் ஆர்.சி., அணிகள் மோதின. முதலில் பேட் செய்த அத்தீஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவர்களில், ஏழு விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் அடித்தது.
அணியில் 19 வயதிற்கு உட்பட்ட வீரரான நிர்மல் குமார், 76 பந்துகளில் ஐந்து சிக்சர், ஆறு பவுண்டரி என, 101 ரன்கள் அடித்தார்.
அடுத்து களமிறங்கிய ஸ்ரீஹெர் ஆர்.சி., அணி, 28.4 ஓவர்களில்,'ஆல் அவுட்' ஆகி, 109 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியடைந்தது.
இதனால், 116 ரன்கள் வித்தியாசத்தில், அத்தீஷ் அணி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.