/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிவிஷன் கிரிக்கெட்: திருவல்லிக்கேணி வெற்றி
/
டிவிஷன் கிரிக்கெட்: திருவல்லிக்கேணி வெற்றி
ADDED : அக் 08, 2025 02:28 AM
சென்னை,சென்னையில் நடந்து வரும் ஆடவருக்கான டிவிஷன் கிரிக்கெட் தொடரில், திருவல்லிக்கேணி சி.சி., அணி, ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆடவருக்கான நான்காவது டிவிஷன் கிரிக்கெட் தொடர், சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகிறது.
சென்னை காந்தி நகர் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், திருவல்லிக்கேணி சி.சி., - பெரம்பூர் கிளப் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருவல்லிக்கேணி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்சை துவங்கிய பெரம்பூர் அணிக்கு, ராஜா 21, விக்ரம் 35 என்ற ரன்களுடன் நல்ல துவக்கம் தந்தனர். பின் வந்த ஸ்ரீநிரஞ்சன் 29 ரன்களுடன் அணிக்கு ஆறுதல் தந்தார். முடிவில், பெரம்பூர் அணி 31.2 ஓவர்களில், 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அடுத்து ஆடிய திருவல்லிக்கேணி அணிக்கு, துவக்க ஆட்டக்காரர்களான அருண்குமார் 35, அக் ஷய் பாரத் 46 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து, சத்யானந்த் 19, லோகேஷ் 11 என நிதானமாக ஆடி, 31.3 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து, 125 ரன்கள் எடுத்து திருவல்லிக்கேணி அணி வென்றது.