/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெயரில் மட்டும் தரமணி 'யமுனா தெரு' 45 நாளாக குடிநீருடன் வருகிறது கழிவுநீர் தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு

ADDED : ஜூலை 12, 2025 12:17 AM
அடையாறு, 'பெயரில் மட்டும் தரமணி யமுனா தெரு; 45 நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. தடுப்பு நடவடிக்கை எடுக்க பல கூட்டங்களில் பேசியும் எந்த பயனும் இல்லை' என, தி.மு.க., கவுன்சிலர் குற்றம்சாட்டினார்.
அடையாறு மண்டல குழு கூட்டம், மண்டல தலைவர் துரைராஜ் தலைமையில், மண்டல அதிகாரி ஆர்டின் முன்னிலையில், நேற்று நடந்தது. இதில், மாநகராட்சி, குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், 178வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பாஸ்கரன், பாட்டிலில் எடுத்துவந்த கழிவுநீர் கலந்த குடிநீரை காட்டி, 'பெயரில் மட்டும் தரமணி யமுனா தெரு; 45 நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. தடுப்பு நடவடிக்கை எடுக்க பல கூட்டங்களில் பேசியும் எந்த பயனும் இல்லை' என குற்றம்சாட்டினார்.
மோகன்குமார் 168வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பேசுகையில், 'கிண்டியில் ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை உயர்த்தி கட்ட, மூன்று மாதமாக கூறுகிறேன். வாரியம் கண்டுகொள்ளவில்லை.
'நடைபாதை உணவு கடைகளின் தரத்தை கண்காணிப்பது யார்; உணவு பாதுகாப்பு துறை ஏன் கூட்டத்துக்கு வருவதில்லை' என குற்றஞ்சாட்டினார்.
விசாலாட்சி 180வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பேசுகையில், 'திருவான்மியூர் மாநகராட்சி மருத்துவமனையில் நாய்க்கடிக்கு சிகிச்சை அளிப்பதில்லை. இங்கு மருந்து இல்லை, பெரிய மருத்துவமனைக்கு செல்லுங்கள் என அலைக்கழிக்கின்றனர். பிற்பகல் 3:00 மணிக்கு பதில், பகல் 12:30 மணிக்கே மருத்துவமனையை மூடிவிடுகின்றனர்' என பேசினார்.
குடிநீரில் கழிவுநீர் கலப்பு, நாய்க்கடிக்கு சிகிச்சை அளிப்பதில்லை என்ற புகாருக்கு, அதிகாரிகள் கூறிய பதிலில் திருப்தியடையாத கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்தனர்.
தொடர்ந்து, வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட பணிகளுக்கு 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.