/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாலியல் குற்றவாளியை தி.மு.க., காப்பாற்றுது: வளர்மதி
/
பாலியல் குற்றவாளியை தி.மு.க., காப்பாற்றுது: வளர்மதி
பாலியல் குற்றவாளியை தி.மு.க., காப்பாற்றுது: வளர்மதி
பாலியல் குற்றவாளியை தி.மு.க., காப்பாற்றுது: வளர்மதி
ADDED : ஜன 12, 2025 12:28 AM

சென்னை, அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, அ.தி.மு.க., மகளிர் அணி சார்பில், சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகே, அணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கண்ணகி போல் வேடமணிந்தும், 'யார் அந்த சார்' என்ற பதாகைகளை கழுத்தில் அணிந்தவாறும், அரசிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
பின், முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியதாவது:
அண்ணா பல்கலை சம்பவத்தின் மிகப்பெரிய குற்றவாளி ஞானசேகரன். பாதிக்கப்பட்ட மாணவி, தாமாக முன்வந்து, குற்றவாளியின் பெயரை தெரிவித்துள்ளார். ஆனால், குற்றவாளி மீது, தி.மு.க.,வினர் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. மாறாக, குற்றவாளியைக் காப்பாற்ற தி.மு.க., அமைச்சர்கள் துடிக்கின்றனர்.
பாதுகாக்கப்பட்ட பல்கலை வளாகத்தில், சுற்றித் திரிந்துள்ளார் எனில், அவருடைய செல்வாக்கு என்னவாக இருக்கும்?
அதேபோல், 'யார் அந்த சார்' என்ற கேள்விக்கு, அண்ணா நகரில் கைது செய்யப்பட்டவரை காட்டியுள்ளனர். உண்மையை மறைக்க பல வழிகளில் முயற்சிக்கின்றனர்.
'பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அ.தி.மு.க.,' என, அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளது, ஏற்புடையது அல்ல.
பெண் தலைவரால் வழிநடத்தப்பட்ட கட்சியை பார்த்து, இவ்வாறு கூறியுள்ளது, கட்சியில் உள்ள ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுப்படுத்துவது போல் உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.