/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
200 கிலோ குட்கா கடத்திய தி.மு.க., பிரமுகர் சிக்கினார்
/
200 கிலோ குட்கா கடத்திய தி.மு.க., பிரமுகர் சிக்கினார்
200 கிலோ குட்கா கடத்திய தி.மு.க., பிரமுகர் சிக்கினார்
200 கிலோ குட்கா கடத்திய தி.மு.க., பிரமுகர் சிக்கினார்
ADDED : நவ 11, 2025 12:44 AM

கொடுங்கையூர்: கொடுங்கையூரில் 200 கிலோ குட்கா கடத்திய தி.மு.க., பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
கொடுங்கையூர், முத்தமிழ் நகர் 181வது தெருவில், கொடுங்கையூர் போலீசார் நேற்று ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் நின்றிருந்த மஹிந்திரா லோடு வேனை, மடக்கி சோதனை மேற்கொண்டனர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட, ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட 200 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த சல்மான் ஷெரிப், 36, என்பதும், தி.மு.க., 35வது வட்ட பொருளாளர் என்பதும் தெரிய வந்தது. கடந்த 7ம் தேதி, பெங்களூரில் இருந்து 350 கிலோ குட்கா பொருட்களை வாங்கி வந்து, அதில் 150 கிலோ குட்கா பொருட்களை ஊத்துக்கோட்டையில் கைமாற்றிய நிலையில், மீதமுள்ள 200 கிலோ குட்கா புகையிலை பொருட்களை கைமாற்ற கொண்டு வந்தபோது, போலீசில் சிக்கியதும் தெரியவந்தது.
அவரை நேற்று கைது செய்த போலீசார், குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

