/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக்கில் 'யு- டர்ன்' செய்தவர் எதிரே வந்த பைக் மோதி உயிரிழப்பு
/
பைக்கில் 'யு- டர்ன்' செய்தவர் எதிரே வந்த பைக் மோதி உயிரிழப்பு
பைக்கில் 'யு- டர்ன்' செய்தவர் எதிரே வந்த பைக் மோதி உயிரிழப்பு
பைக்கில் 'யு- டர்ன்' செய்தவர் எதிரே வந்த பைக் மோதி உயிரிழப்பு
ADDED : நவ 11, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனையூர்: இருசக்கர வாகனத்தில் சென்றவர், யு- - டர்ன் செய்த போது, மற்றொரு இருசக்கர வாகனம் மோதி பலியானார்.
உத்தண்டியை சேர்ந்தவர் நாகராஜ், 45. நேற்று, இருசக்கர வாகனத்தில் பனையூரில் இருந்து கோவளம் நோக்கி செல்ல, சாலையில் யு - -டர்ன் செய்தார்.
அப்போது, அக்கரையில் இருந்து கோவளம் நோக்கி சென்ற, அடையாளம் தெரியாத மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட நாகராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, விபத்து ஏற்படுத்திய நபரை தேடி வருகின்றனர்.