/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தே.மு.தி.க., பிரமுகர் விடுதியில் மரணம்
/
தே.மு.தி.க., பிரமுகர் விடுதியில் மரணம்
ADDED : ஏப் 10, 2025 12:22 AM

திருவேற்காடு, திருவேற்காடு, காமாட்சிபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 52; திருவேற்காடு நகர தே.மு.தி.க., துணைச் செயலர். இவரது மனைவி செல்வராணி, 44. தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
மதுபோதைக்கு அடிமையான ஏழுமலை, மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக திருவேற்காடில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.
ஏழுமலை அறையை சுத்தம் செய்ய, லாட்ஜ் ஊழியர் நேற்று மதியம் சென்றுள்ளார். அப்போது, அவர் இறந்து கிடந்தார். திருவேற்காடு போலீசார் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மாரடைப்பு காரணமாக ஏழுமலை உயிரிழந்தது தெரிய வந்தது.