/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.மு.க., பெண் பிரமுகரை கிண்டல் செய்தவர் கைது
/
தி.மு.க., பெண் பிரமுகரை கிண்டல் செய்தவர் கைது
ADDED : ஜன 23, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர், அண்ணா நகர், நடுவாங்கரையைச் சேர்ந்தவர் சங்கீதா, 40. தி.மு.க., பிரமுகர். நேற்று முன்தினம் இரவு, நடுவாங்கரை பிரதான சாலையில், தனது குழந்தையுடன் நடந்து சென்றார்.
அப்போது, அவரை பின் தொடர்ந்த எம்.ஜி.ஆர்., காலனியைச் சேர்ந்த ஓட்டுநரான மகாகிருஷ்ணன், 28, என்பவர் போதையில், கேலி கிண்டல் செய்து தொல்லை கொடுத்துள்ளார். பின், முடியைப் பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார்.
இதுகுறித்து, நேற்று காலை அண்ணா நகர் போலீசில் சங்கீதா புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, ரகளை செய்த மகாகிருஷ்ணனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

